விகாரை கட்டுமானத்திற்கு எதிரான போராட்டத்திற்கு நீதிமன்றால் தடை உத்தரவு!

திருகோணமலை இலுப்பைக்குளத்தில் தடைசெய்யப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரை ஒன்றின் கட்டுமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவிருந்த nஇலையில், நீதிமன்ற தடை உத்தரவின் பேரில் குறித்த போராட்டம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநரினால் தடையுத்தரவையும் மீறி கடந்த திங்கட்கிழமை முதல் திருகோணமலை நிலாவெளி இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரையின் கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையிலேயே இன்றைய தினம் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதற்கு நீதிமன்றால் அனுமதி மறுக்கப்பட்டதாக பொலிஸாரால் ஒலிபெருக்கி மூலம் அறிவித்த நிலையில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

அத்துடன் குறித்த இடத்திலிருந்து செய்திகளை சேகரிக்க முடியாது என ஊடகவியலாளர்களுக்கு பொலிஸாரினால் இடையூறு விளைவிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *