யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் வன்முறை கும்பல்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் அடிதடி மோதலில், 22 பேர் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
தாக்குதல்களுக்கிலக்காகி காயங்களுடன் திடீரென 22 பேர் வைத்தியசலையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சில மணி நேரங்களுக்குள் அனுமதிக்கப்பட்டதால், வைத்தியர்கள், தாதியர்கள், சிற்றூழியர்கள் பெரும் சிரமத்தையும், நெருக்கடிகளையும எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் , அவர்களுடன் உதவிக்கு வந்தவர்கள் எனப் பலரும் வைத்தியசாலையினுள் வந்ததால் அங்கும் சற்று மோதல் போக்கு காணப்பட்டதுடன் , மோதலில் ஈடுபடவும் சிலர் முயன்றமை குறிப்பிடத்தக்கது.