பனை அபிவிருத்தசபையின் அனுசரனையில் வவுனியவில் பனைசார் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சி இன்று(28) நெளுக்குளத்தில் உள்ள பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிருஷாந்த பத்திராஜ கலந்துகொண்டிருந்தார். இதன்போது மரநடுகை உள்ளிட்ட பல நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் பனை அபிவிருத்தசபையின் அனுசரனையோடு வவுனியா உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பனைசார் உற்பத்திப் பொருட்கள் தொடர்பான பயிற்சி நெறியொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த பயிற்சிநெறியையடுத்தே இக் கண்காட்சி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.