முடி உதிர்வு, பொடுகு தொல்லை, அடி முடி வெடிப்பு, வறண்ட கூந்தல் போன்ற பிரச்சினைகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிகப்பெரும் தொல்லையாகத் தான் இருக்கிறது.
இந்தப் பிரச்சினைகள் தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் இந்த முடிப் பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
இந்தப் பிரச்சினைகளுக்கு எவ்வித பக்கவிளைவுகளுமின்றி இயற்கை வழிகளிலேயே சரி செய்யலாம் அதிலும் பல இயற்கை நலன்கள் நிறைந்த அவகேடோ கொண்டு ஹேர் மாஸ்க் செய்து பயன்படுத்தி பார்ப்போம்.
ஒரு பழுத்த அவகேடோவை அரை கப் அளவு எடுத்து அதில் தேங்காய் கிரீம் 3 அல்லது 4 தேக்கரண்டியும் கற்றாழை சாறு 4 தேக்கரண்டியும் ஜோஜோபா எண்ணெய் இவை அனைத்தையும் நன்கு கலந்து பேஸ்ட் செய்து கூந்தலுக்கு நன்கு மசாஜ் செய்து அரை மணி நேரத்திற்குப் பின் கழுவினால் கூந்தல் வறண்டு போகாமல் அழகாக மாறும்.