தமிழினப்படுகொலை வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர்கள் வாழும் பகுதிகளில் உணர்வூர்வமாக இடம்பெற்று வரும் நிலையில், மட்டக்களப்பு கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்றுக் காலை மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது.
இதன்போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் முள்ளிவாய்க்கால் கஞ்சி தொடர்பில் ஏற்பாட்டாளர்களிடமிருந்து கேட்டறிந்து கொண்ட அதேவேளை,கஞ்சியையும் பெற்று பருகி சென்றது அனைவரினதும் கவனத்தை பெற்றிருந்தது.