வட மாகாணம் – பூநகரி ஏரியை அண்மித்த பகுதிகளில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் சூரிய சக்தி மின்சார திட்டம்:

”வட மாகாணத்தில் பூநகரி ஏரியை அண்மித்த பகுதிகளில் 6000 ஏக்கர் நிலப்பரப்பில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் 700 மெகாவோல்ட் சூரிய சக்தி மின்சாரத்தை வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பான திட்ட மீளாய்வு கூட்டம் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்; தலைமையில் நேற்று இடம்பெற்றது. 

இது குறித்து தனியார் சூரியப்படல நிறுவனம் ஒன்றின் தலைவர் ஜயந்த சமரகோன்  கருத்துத் தெரிவிக்கையில், ”

தேசிய மின்சார அமைப்பிற்கு தினமும் 6.5சதவீத புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வழங்கும் சூரிய சக்தி மின் அமைப்பு ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  வட மாகாணத்தில் பூநகரி ஏரியை அண்மித்த பகுதிகளில் 6000 ஏக்கர் நிலப்பரப்பில் இத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.  இதற்கமைவாக 1000 ஏக்கரில் 700 மெகாவோல்ட் சூரிய சக்தி மின் அமைப்பு நிறுவப்படவுள்ளதோடு, சூரிய சக்தி மின் அமைப்பு அமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் பூநகரி ஏரியை முழுமையாக அபிவிருத்தி செய்து அப்பிரதேசத்தில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யும் வகையில் விவசாயிகளுக்கு மின்சார வசதி செய்து கொடுப்பதற்கும்  நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனம் 5 பில்லியன் ரூபாவினை செலவிடவுள்ளதாகவும், இத்திட்டத்தின் மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத புதுப்பிக்கத்தக்க மின்சாரம் தேசிய மின்சார அமைப்பில் சேர்க்கப்படுவதால் அப்பகுதி விவசாயிகள் பயனடைவார்கள் என்று கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *