யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் காரும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியிலிருந்து சங்கரத்தை செல்லும் பாதையில் சுமார் 200 மீட்டர் தூரத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் விபத்து குறித்த விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.