வடக்கு ஈரானில் ரிக்டர் அளவில் 5.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
ஜெர்மனி வழங்கிய சக்திவாய்ந்த நவீன குண்டுகளை இஸ்ரேலிய போர் விமானங்கள் வீசியதன் விளைவாக ஈரானில் நிலக்கீழ் சுரங்கத்தில் இருந்த வெடி பொருட்கள் அதிர்வு காரணமாக வெடித்திருக்கலாம் என்றும், அதுவே நில நடுக்கம் ஏற்பட காரணம் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
செம்னான் மாகாணத்திற்கு தென்மேற்கே 37 கிலோமீட்டர் (23 மைல்) தொலைவில், 10 கிலோமீற்றர் (6 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்தன.
இது தொடர்பான சேத விபரங்களும் இதுவரையில் வௌியாகவில்லை. ஆனால் செம்னான் மாகாணத்தில் உள்ள சோர்கே நகரைச் சுற்றிய பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
சோர்கேயிலிருந்து சுமார் 150 கிலோமீற்றர் (93 மைல்) தொலைவில் உள்ள தலைநகர் தெஹ்ரானிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.