வடக்கில் – பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் நியமனம்:

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக மீண்டும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வி.பி.எஸ்.டி.பத்திரண சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளராக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி செயற்பட்டுவரும் நிலையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக பி.கே.விக்கிரமசிங்கவும் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக சுபாஸ்கரனும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வினோதனும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக உமாசங்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளராக ஜி.சுகுணணும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளராக எம்.எச்.எம்.அசாத்தும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளராகவும் பி.எஸ்.என்.விமலரட்ணவும் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளராக வீரக்கோனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக முன்னர் கடைமையாற்றி இடமாற்றப்பட்ட திலீப் லியனகே அனுராதபுரம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

நியமனம் வழங்கப்பட்டவர்கள் விரைவில் கடமைகளை பொறுப்பேற்பர் என தெரிவிக்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *