இஸ்ரேலிய இராணுவம் லெபனானில் முன்கூட்டியே தாக்குதல்களை நடத்தியுள்ள அதேவேளை, பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட், நாடு முழுவதும் 48 மணிநேர அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.
உயர்மட்ட தளபதியின் கொலைக்கு "ஆரம்ப பதிலடியாக" இஸ்ரேலை நோக்கி ஒரு பெரிய அளவிலான தாக்குதலை மேற்கொள்ளப்போவதாக ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்திருந்த நிலையிலேயே தாம் தமது இஸ்ரேலிய மக்களை பாதுகாக்கும் நோக்கில் முன்கூட்டிய தாக்குதலை லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா நிலைகள் மீது மெற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இஸ்ரேலிய தாக்குதலில் லெபனானில் மக்கள் வாழ் குடியிருப்புக்களே அழிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் லெபனானில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றான.