ரஸ்யா தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற கார்க்குண்டு வெடிப்பில் இராணுவத்தின் உயர்அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.
ரஸ்ய இராணுவத்தின் பிரதான செயற்பாட்டு அலுவலகத்தின் துணை தலைவரான யரோஸ்லாவ் மொஸ்காலிக் மேற்படி சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
காரின் எரிவாயு சிலிண்டருக்கு அருகில் பொருத்தப்பட்டடிருந்த வெடிபொருள் தொலைவிலிருந்து இயக்கப்படும் கருவி மூலம் வெடிக்கவைக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்மாடிகளிற்கு அருகில் கார் தீப்பற்றி எரிவதை காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களி;ல் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலிற்கு யார் காரணம் என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.