ரணில் விக்கிரமசிங்கவுடன் எந்த கூட்டணியையும் அமைக்கப் போவதில்லை: சஜித்

”முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எந்த கூட்டணியையும் அமைக்கப் போவதில்லை” என ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தலைவர்களுடன் இன்று கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளதாவது” பொது தேர்தலை இலக்கு வைத்து பிரச்சாரம் செய்ய ஐக்கிய மக்கள் சக்தி தயாராகியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு சமூகங்களில் இருந்து எனக்கும் ஆதரவு கிடைத்தது.

இலங்கையின் முன்னேற்றத்திற்கான எனது அர்ப்பணிப்பு தொடரும் நீங்கள் சிங்களவர், தமிழ், முஸ்லிம், பர்கர் அல்லது வேறு எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி,
நீங்கள் எந்த அரசியல் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டாலும் சரி, உங்கள் நம்பிக்கையை நான் உணர்ந்திருக்கிறேன்.

அவற்றை என்னுடன் எடுத்துச் செல்கிறேன்.என்னை நம்பியதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. தகுதியான எதிர்காலத்திற்காக போராடுவதை நாங்கள் ஒருபோதும் நிறுத்த மாட்டோம்” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *