ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்ப்பாக எந்த வேட்பாளரையும் நிறுத்துவதில்லை எனவும் சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவுக்கு கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் பூரண ஆதரவை வழங்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவி்த்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று முன்தினம் மாலை கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.