ரணிலுக்காக யாழில் பிச்சை எடுத்த அங்கையன்:

நெருக்கடியில் இருந்த நாட்டினை மீட்டு, நாட்டில் பல்வேறு வேலை திட்டங்களை முன்னெடுத்து தற்போது உள்ள நிலைக்கு கொண்டு வந்தவர் ரணில் விக்ரமசிங்கவே. ஆகையால் வரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும். அவருக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும் என இன்று யாழ்ப்பாணத்தில் அங்கையன் ராமநாதன் தெரிவித்தார்.

யாழில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அங்கையன் மேற்கண்டவாறு கூறியபோது, ஊடகவியலாளர் ஒருவர் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பிலே கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அங்கையன், தமிழரசுக் கட்சியை நம்பிருந்த மக்களுக்கு தமிழரசு கட்சியினர் செருப்படி வழங்கியிருக்கிறார்கள் என்றும் அவர்கள் தங்களுக்குள் ஒற்றுமை இல்லாத பல்வேறு குழப்ப நிலைக்கு சென்றுள்ளார்கள். இதனால் ஜனாதிபதியை ஆதரிப்பது தொடர்பிலே பல்வேறு குழப்பம் இருந்து வருகிறது என்றும் இதன்போது குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *