யாழ் விஜயத்தின் போது பலாலி விவசாய காணிகளை ஜனாதிபதி கையளிப்பாராம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

யாழ். நகர் செல்லும் அவர், பலாலியில் இராணுவ கட்டுப்பாட்டில் கடந்த 33 வருடங்களாக காணப்பட்ட 278 ஏக்கர் விவசாய காணிகளை உரிமையாளர்களிடம் மீள கையளிக்கவுள்ளார்.

பலாலியில் நடைபெறும் நிகழ்விலேயே காணி கையளிப்பு நிகழ்வும் நடைபெறவுள்ளது. அத்துடன் பலாலியில் மற்றுமொரு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ள ஜனாதிபதி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் அரச காணிகளில் குடியிருப்பாளருக்கு காணி உறுதிப்பத்திரங்களையும் வழங்கவுள்ளார்.

அதேவேளை விவசாயிகளின் நலன்களுக்காக விவசாய திணைக்களத்தால், உருவாக்கப்பட்ட மென்பொருளின் அங்குரார்ப்பண நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளார்.

அத்துடன் வெள்ளிக்கிழமை மாலை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அவசர சிகிச்சை பிரிவின் கட்டடத்தையும் திறந்து வைக்கவுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள நான்கு நிகழ்வுகளிலும் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *