காணாமல் ஆக்கபட்டோர் பற்றிய அலுவலகத்தினால் யாழ். மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட உறவுகளிடம் இன்று (16) முதல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உடுவில், கோப்பாய் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவிற்குட்டோருக்கு இன்று காலை உடுவில் பிரதேச செயலகத்தில் காணாமல் ஆக்கபட்டோர் பற்றிய அலுவலகத்தினால் இவ்விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.
நாளை (17) பருத்திதுறை, மருதங்கேணி, கரவெட்டி பிரதேச செயலக பிரிவுகளுக்கான விசாரணைகள் பருத்தித்துறை பிரதேச செயலகத்திலும், 18ஆம் திகதி யாழ்ப்பாணம், சங்கானை, சண்டிலிப்பாய், காரைநகர், நல்லூர், சாவகச்சேரி, நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, வேலணை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் விசாரணைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.