யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டு பகுதியில் நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் கார் ஒன்றில் வந்த சிலர் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன்.
இதேவேளை, தாக்குதலுக்கு இலக்கானவரும் குற்றங்களுடன் தொடர்புடையவர் என்றும் பொலிசாரால் தேடப்பட்டு வந்த ஒருவரும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ள அதேவேளை சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.