பொசன் பௌர்ணமி தினமான இன்று செவ்வாய்க்கிழமை (10) யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரை பகுதியில் பெருமளவான சிங்கள மக்களை கொண்டுவந்து வாகனங்கள் இறக்கி செல்கின்றன.
இந் நிலையில் குறித்த திஸ்ஸ விகாரையானது சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்து அப்பகுதியில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
குறித்த இடத்துக்கு சிங்கள ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.