வெள்ளவத்தை கடற்கரையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று(5) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சர்வானந்தா திருசாந்த் என்ற 28 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் உடலில் சிவப்பு நிற சிராய்ப்பு அடையாளங்கள் காணப்படுவதாகவும், இது தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும், சடலம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.