தேர்தல் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்கவால் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
அதன்போது, அலுவலகத்தில் பெயர்ப்பலகை, நினைவுப் படிகம் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. . தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள், தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்கா, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன், யாழ்ப்பாண மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சி.அமல்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.