முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை கண்டிக்கும் வகையில் 7 தமிழ் அரசியல் கட்சிகளால் கூட்டாக கதவடைப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை (20) பூரண கதவடைப்பு பொது முடக்கத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் பூரண ஹர்த்தால் (கதவடைப்பு பொது முடக்கம்) அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றது.