இன்று (30) சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு அவர்களின் உறவுகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
இவ்வாறாக வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கையில் தீச்சட்டிகளை ஏந்தியபடி முன்செல்ல தமிழ் கட்சி சார் உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்புகள், பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஊடகவியலாளர்கள் என அனைவரும் கோசங்களை எழுப்பியபடி பின் தொடர்ந்து இப்போராட்டத்தில் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியில் இருந்து ஆரம்பித்த இப்போராட்டம் மருத்துவமனை வீதி ஊடாக சென்று முனியப்பர் கோவில் முன்பாக நிறைவுற்றது.