யாழ்ப்பாணத்திற்கு இன்று (25) விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) கவனத்தை ஈர்க்கும் முகமாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழர்களின் வலிகளை, அழிவுகளை, சித்தரிக்கும் ஓவியங்கள் பல காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.