யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து சிவனொளிபாதமலைக்கு மூன்று நாள் தல யாத்திரை இன்று ஆரம்பமானது.
நல்லூர் கந்தசுவாமி கோவிலில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை வழிபட்ட பின்னர் பக்தர்களால் தலயாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கை முதலுதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையும் மலையக இந்து குருமார் ஒன்றியமும் இணைந்து யாத்திரையை ஒழுங்குபடுத்தின. பலர் இதில் கலந்து கொண்டு, சிவனொளிபாதமலைக்கான தங்களது யாத்திரையை ஆரம்பித்துள்ளனர்