ஜனநாயக தேசிய கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வும் ஆரம்ப பரப்புரைக்கூட்டமும் இன்று (13) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் யாழ் தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளருமான அங்கஜன் இராமநாதனின் தலைமையில் நடைபெற்றது.
இன்நிகழ்வில், ஜனநாயக தேசிய கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
ஜனநாயக தேசிய கட்சியை சேர்ந்த குறித்த வேட்பாளர்கள் இம்முறை பொதுத்தேர்தலில் தபால்பெட்டி சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.