யாழில் அடி காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு!

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 43வயதுடைய  கஜேந்திரன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியின் புதிதாக கட்டுமானம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு நிர்மாணிக்கப்படும் கட்டுமானத்திற்கு அருகாமையில் சடலமானது மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவரின் உடலில் அடி காயங்கள் காணப்படுகின்றன. அத்துடன் கட்டுமானத்தில் இரத்த கறைகளும் காணப்பட்டதாகவும், குறித்த நபர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

மீட்கப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவல்துறை  தடயவியல் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *