இங்கிலாந்தில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் இறுதிக்கட்டத்தை அண்மித்துள்ள நிலையில் லண்டன் மாநகருக்கான மேயராக சடிக்ஹாண் (Sadiq Khan) மீண்டும் மூன்றாவது தடவையாக வெற்றியீட்டியுள்ளார்.
இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் படி 1140 பிரதேச செயலாளர்களின் வெற்றியோடு 50 பிரதேச சபைகளை தொழில் கட்சியான Labour party கைப்பற்றியுள்ளது.
இதே வேளை 521 பிரதேச செயலர்களின் வெற்றியோடு 12 பிரதேச சபைகளை Liberal Democrat party பெற்று இரண்டாம் நிலையிலும், ஆளும் கட்சியான Conservative party 513 பிரதேச செயலர்களைக் கொண்டு 6 பிரதேச சபைகளையும் மட்டும் கைப்பற்றி மூன்றாம் நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.,