முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் தங்கியிருந்த வீடு மற்றும் ஆசிரியரின் மோட்டார் சைக்கிள் என்பன இனம் தெரியாத நபர்களால் நேற்றிரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
சக ஆசிரியர்களின் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதும், ஆசிரியர் தங்கியிருந்த வீடு பகுதியளவில் எரிந்துள்ளதுடன், விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.