முல்லைத்தீவு, கேப்பாபிலவு பகுதியில் துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் 34 வயதான நபர் ஒருவர் இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நபரிடமிருந்து 2 இடியன் துப்பாக்கிகளைக் கைப்பற்றிய பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.