முல்லைத்தீவில் வீடொன்றில் இருந்து சடலம் கண்டெடுப்பு!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு பகுதியில் வீடொன்றில் இருந்து  குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்தவர் கிருஸ்ணன் கிருஸ்ணராசா எனும் 52 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த குடும்பஸ்தர் குடும்பத்தை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *