முல்லைத்தீவு, மல்லாவிப் பகுதியில் வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலமொன்று நேற்று (23) காலை பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 28 வயதான உத்தமன் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இருப்பினும் இறப்பிற்கான காரணம் தெரியாத இந்நிலையில் இது குறித்த விசாரணைகளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.