முல்லைத்தீவில் காணாமல் போன பெண் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியில் வசித்த இளம் குடும்ப பெண்ணொருவரை காணவில்லை என குறித்த பெண்ணின் தயாரால் நேற்று முன்தினம் (23) முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் காணாமல் போன பெண்ணின் தாயார் தெரிவிக்கையில்:

புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாராத்தில் வசிக்கும் தனது மகள் , மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகியுள்ளார். முள்ளியவளையினை சேர்ந்த 23 வயதுடைய மருமகன் இவர்கள் இருவரும் கடந்த மாதம் முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வாழ்ந்துள்ளார்கள்.

தனது மகள் தன்னுடன் தொலைபேசியில் உரையாடுவதாகவும் கடந்த சனிக்கிழமைக்கு (21) பின்னர் மகளின் தொலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் மகளும், மருமகனும் வசிக்கும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இருவரின் தொலைபேசிகளும் தொடர்பு கொள்ளமுடியாதிருந்தது.

இந்நிலையில் அவர்கள் தங்கி இருந்த வீட்டின் பின்புறம் புதிதாக மண்ணால் நிரப்பட்ட குழி ஒன்று காணப்படுகின்றது. இதனால் சந்தேகம் எழுந்த நிலையில் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததாக தெரிவித்தார்.

குறித்த காணாமல் போன பெண் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டு அமைவாக முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி k.H.k.சன்கீத் தலைமையிலான குழுவினர் விசாரணையை துரிதப்படுத்தி தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போது கொழும்பு வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து சந்தேக நபரான பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மனைவி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 23 வயதுடைய த.கீதா  என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று (24) அவரது இளம் மனைவி புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு அமையா குறித்த பகுதியிணை தோண்டும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் சட்டவைத்தி அதிகாரி க.வாசுதேவா தடையவியல் பொலிஸார், கிராம சேவையாளர், சிறப்பு அதிரடிப்படையினர் ஆகியேர் முன்னிலையிலும் ஆகழ்வு பணிகளை முன்னெடுத்துள்ளார்கள்

வாடகைக்கு இருந்த வீட்டின் மலசல கூட குழிக்கு அருகில் சுமார் ஐந்து அடி ஆழத்தில் குறித்த பெண்ணின் உடல் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

பெண்னின் சடலம் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *