முல்லைத்தீவில் இடம்பெற்ற மந்துவில் படுகொலையின் 24 ஆம் ஆண்டு நினைவேந்தல்:

1999 ஆம் ஆண்டு முல்லைத்தீவு – மந்துவில் பகுதியில் இலங்கை விமானப்படை நடத்திய குண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட 24 தமிழர்களை நினைவுகொள்ளும் நிகழ்வு பொதுமக்களால் இன்று (15) அனுஷ்டிக்கப்பட்டது.

குறித்த குண்டுவீச்சு தாக்குதலில் 40ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நவநீதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மந்துவில் படுகொலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ,தாய்த்தமிழ் பேரவையின் ஸ்தாபகர் ச.சத்தியரூபன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், எனப் பலரும் கலந்து கொண்டு இறந்த மக்களுக்கு அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *