முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது;
புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் தென்னம் காணியொன்றில் இருந்து துர்நாற்றம் வீசியமையால் அங்கிருந்த கிராமவாசி ஒருவர் சென்று பார்த்தவேளை அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் காணப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட குறித்த நபர் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியைச் சேர்ந்த இராசலிங்கம் சுதர்சன் என கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பவ இடத்துக்குச் சென்ற முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதிபதி எஸ்.கெங்காதரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி சுபுண் ஏக்கநாயக்க மற்றும் கிராம சேவையாளர் வே.மேகானந்தசிவம் ஆகியோர் சடலத்தை பார்வையிட்டதுடன், தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் பரிசோதனைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
தற்போது சடலம் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.