முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அன்ரனி இம்மானுவேல் சில்வா கொலை வழக்கில், நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்ட போது வெளிநாட்டில் தஞ்சமடைந்த அவரது மனைவி உட்பட 03 பேரையும் கொலைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் (10) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2002 புரட்டாசி மாதம் வவுனியாவில் வீட்டில் தீ பரவி, பாராளுமன்ற உறுப்பினர் அன்ரனி இம்மானுவேல் மரணித்தார். இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அவரது மனைவி உட்பட03 பேர் கைது செய்யப்பட்டு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.