புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவி இழப்பு மற்றும் அமைச்சுகளில் செயலாளர்கள் மாற்றமடைந்துள்ள நிலையில் முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் பயன்படுத்திய வாகனங்கள் மீள கையளிக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.