மீண்டும் ஆட்சியை கைப்பற்ற இடமளித்தால் எமது நாட்டு மக்கள் எரிந்து சாம்பலாகி விடுவீர்கள்: எச்சரிக்கும் தேரர்

225 பாராளுமன்ற உறுப்பினர்களே இலங்கையை அதளபாதாளத்துக்குள் தள்ளியுள்ளனர். அவ்வாறானதொரு தரப்பினருக்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்ற இடமளித்தால் எமது நாட்டு மக்கள் இதற்கு மேலாக எரிந்து சாம்பலாகி காற்றில் கரைந்து விடுவார்கள் என மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹங்குனவெவே தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

மிஹிந்தலை விகாரையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

அதிகாரத்தை கைப்பற்றவே அனைத்து தரப்பினரும் போராடுகிறார்கள். இனம், மதம் என்ற போர்வையில் இரத்தம் சிந்த வைக்கவே முயல்கின்றனர். 

இதற்கு சிறந்த உதாரணமே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவமாகும். நாட்டு மக்கள் என்ற வகையில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் துன்பத்தையே அனுபவித்து வருகிறோம். நாட்டு மக்களே பயங்கரவாதிகளுடன் இனியும் தொடர்பு கொள்ளாதிர்கள். 

225 பாராளுமன்ற உறுப்பினர்களே இலங்கையை அதளபாதாளத்துக்குள் தள்ளியுள்ளனர். அவ்வாறானதொரு தரப்பினருக்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்ற இடமளித்தால் எமது நாட்டு மக்கள் ஆகிய நீங்கள் இதற்கு மேலாக எரிந்து சாம்பலாகி காற்றில் கரைந்து விடுவீர்கள். அதன் பிறகு இந்த நாடும் அழிந்து விடும்.

இன்று பௌத்த தேரர்கள் ஆலய குருக்கள் மௌலவிமார்கள் அல்லது அருட்தந்தைகளை அழைத்து அரசியல்வாதிகள்  ஆசி வாங்கிக் கொள்கின்றனர். 

இது நாட்டு மக்களுக்கு செய்யும் துரோக செயல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சர்வ மதத்தலைவர்களே நாட்டு  ஒன்றிணைய வேண்டும். தொடர்ந்தும் ஏமாறக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *