சீன எல்லைக்கு அருகே வடகிழக்கு மியான்மரில் இடம்பெயர்ந்த மக்கள் முகாம் மீது பீரங்கித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட குறைந்தது 29 பேர் கொல்லப்பட்டனர்.
பல தசாப்தங்களாக சுயராஜ்யத்திற்காக போராடி வரும் பல இனக் கிளர்ச்சிக் குழுக்களில் ஒன்றான கச்சின் சுதந்திர அமைப்பின் (KIO) கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இந்த முகாம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கச்சின் மாநிலத்தில் கடந்த 63 ஆண்டுகால மோதலில் இது மிக மோசமான தாக்குதல் என தெரிவிக்கப்படுகிறது.
நாடுகடத்தப்பட்ட தேசிய ஒற்றுமை அரசாங்கம் (NUG) முகாம் மீதான தாக்குதலுக்கு இராணுவ ஆட்சியைக் குற்றம் சாட்டியது, இது “போர்க்குற்றம் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்” என்றும் விவரித்துள்ளது.