மாத்தறை வெல்லமட மகிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தின் பழைய கட்டிடத்தின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல வெடிப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த கட்டிடம் புனரமைக்கப்படும் நிலையில், இந்த வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.இதன்போது, வெளிநாட்டு தயாரிப்பு என சந்தேகிக்கப்படும் ரீ -56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் 21 தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.அத்துடன், வேறு வகையான 136 தோட்டாக்கள் மற்றும் 2 டெட்டோனேட்டர்கள் உள்ளிட்ட பல வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.