மாதகல் கடற்பகுதியில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த படகு மூழ்கியதில் அதில் ஒருவர் பலியாகியுள்ளார்.
மாதகல் பிரதேசத்தை சேர்ந்த நாகராசா பகீரதன் (வயது 21) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
நேற்றையதினம் இடம்பெற்ற இப் படகு விபத்தில் இவருடன் கூட சென்ற மற்றைய நபர் கடலில் நீந்திக்கொண்டிருந்த போது ஏனைய மீனவர்கள் அவதானித்து அவரை மீட்டுள்ளனர்.
இருப்பினும் இன்னுமொரு நபரான நாகராசா பகீரதன் என்பவரை நீண்ட னேரமாக தேடியும் கிடைக்காத நிலையில் அவரின் சடலம் இன்று கரையொதுங்கியுள்ளது.