முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம்- துணுக்காய் பகுதியில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் நால்வர் கண்ணிவெடி விபத்தில் படுகாயமடைந்துள்ளனர். இன்று மதியம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வெடி விபத்தில் மனிதநேய கண்ணிவெடியகற்றும் பணியில் ஈடுப்ட்டிருந்த நான்கு பெண் பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
தங்கராசா ராஜேஸ்வரி (வயது 43), கதிரேசு கவிகலா (வயது 40), கிஷோர் மோகனாம்பாள் (வயது 39), சிவரூபன் தமிழினி ஆகியோரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த நால்வரில் மூவர் மாங்குளம் ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்களுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.