மறைந்த மூத்த ஊடகவியலாளர் குகதாசனுக்கு சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் தனது இரங்கலை வெளியிட்டுள்ளது.
இன்றைய தினம் வெளியான அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
30.06.2024
இரங்கல் அறிக்கை
எமது அமைப்பாகிய சர்வதேச தமிழ் ஊடகவியலளார் ஒன்றியத்தினை உருவாக்குவதில்முதன்மையான பங்காற்றியவரும், அதன் ஆரம்ப காலந்தொட்டு செயலாளராகச் சிறப்பாகப்பணியாற்றியவருமான திரு. குகதாசன் தம்பிப்பிள்ளையின் பிரிவினால் பெருந்துயர்அடைந்துள்ளோம்.
குகன் , குகன் அண்ணா என எம்மால் அன்பாக அழைக்கப்பட்ட திரு. குகதாசன், தமிழ்ச்சமூகத்தின் மேம்பாட்டில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வந்தார். ஊடகசுதந்திரம்மறுக்கப்பட்ட நிலையில், சிறிலங்கா அரசபடைகளின் அச்சுறுத்தல் காரணமாகபுலம்பெயர்ந்து தமக்கிடையே தொடர்புகளற்று சிதறிக்கிடந்த தமிழ் ஊடகவியலாளர்களைஒருங்கிணைப்பதற்காக சில மூத்த ஊடகவியலாளர்களின் ஆதரவுடன் சர்வதேசஊடகவியலாளர் ஒன்றியத்தினை உருவாக்கினார். அதனை பிரித்தானியாவில்பதிவுசெய்யப்பட்ட அமைப்பாக மாற்றுவதிலும், எமது அமைப்பினால் மேற்கொள்ளப்பட் ட அனைத்து நடவடிக்கைகளிலும் அவர் தனது முழுமையான பங்களிப்பினை வழங்கினார்.
எமது அமைப்பினால் நடத்தப்பட்ட மாநாடுகள், பயிற்சிப்பட்டறைகள், ஊடகவியலாளர்நினைவேந்தல் நிகழ்ச்சிகள் என பெரும்பாலானவை பிரித்தானியாவிலும், சில பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் நடைபெற்றன. டென்மார்க்கில் அவர் வசித்துவந்தபோதிலும் மேற்படி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதிலும், அவற்றில் நேரடியாகக்கலந்துகொள்வதிலும் அவர் தவறுவதில்லை. அதுபோன்று, அமைப்பின் செயற்குழுக்கூட்டங்களிலும் தவறாது கலந்து கொண்டார்.
எமது அமைப்பில் இணைந்துகொள்ளாதிருந்த தமிழ் ஊடகவியலாளர்களுடனும், வேற்றுஇன ஊடகவியலாளர்களுடனும் அவர் தொடர்புகளைப் பேணிவந்தார். அதுபோன்று, Reporters sans frontières, International Federation of Journalists போன்ற சர்வதேசஊடகவியலாளர் அமைப்புகளுடனும் தொடர்புகளைப் பேணிவந்த அவர், தாயகத்தில்ஊடகவியலாளர்கள் பாதிப்புக்குள்ளாகிறபோது அவற்றை இவ்வமைப்புகளின் ஊடகசர்வதேச நாடுகளின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
தாயகத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர்களை ஊக்குவிப்பதற்காக அங்கு சிறப்பாகச்செயற்படும் ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கும் திட்டத்தினைநடைமுறைப்படுத்துவதிலும் அவர் முன்னின்று உழைத்தார்.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘ஈழநாடு’ பத்திரிகையில் ஒரு செய்தியாளராகஆரம்பித்த அவரது ஊடகப்பயணம் புலம்பெயர்ந்த நிலையிலும் அவரது இறுதிக்காலம்வரை தொடர்ந்தது. டேனிஸ் மொழிப் பத்திரிகைகளில் அவர் ஆக்கங்கள்எழுதிவந்துள்ளார்.
திரு. குகதாசனின் மரணம் அவரது குடும்பத்தினருக்கு ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகஅமைந்து விட்டதனைப் போலவே, சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்திற்கும் இட்டுநிரப்ப முடியாத இழப்பாகும். அவரது புகழுடல் என்றென்றும் எங்களோடிருக்கும்.
அன்னாரது இழப்பினால் துயருற்றிருக்கும் மனைவி, பிள்ளைகள், மற்றும்குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆனந்தி சூரியப்பிரகாசம்
தலைவர்