இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய அரசியல்வாதியும் மேற்கு வங்காள முதலமைச்சருமான மம்தா பானர்ஜியை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) துபாயில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பின் போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தனது மாநிலத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஓவியம் ஒன்றையும் பரிசாக வழங்கினார்.