இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அந்த இரங்கல் செய்தி வருமாறு,
நான் எனது சார்பிலும், இலங்கை மக்கள் சார்பிலும் இந்தியக் குடியரசுக்கும், கலாநிதி. மன்மோகன் சிங் அவர்களின் குடும்பத்தாருக்கும், உலகெங்கிலும் அவர் மீதான பற்றை வெளிப்படுத்தும் எண்ணற்றவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறேன்.