மன்னார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட இளம் தாயான சிந்துஜா மருத்துவ தவறின் காரணமாக உயிரிழந்தமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், மனஉளைச்சலுக்கு ஆளாகியிருந்த சிந்துஜாவின் கணவரான 26 வயதுடைய எஸ்.சுதன், நேற்று தவறான முடிவெடுத்து தன் உயிரை மாய்த்துள்ளார்.
நேற்றைய தினம் அவரது வீட்டில் உயிரை மாய்க்க அவர் மேற்கொண்ட முயற்சியை அவதானித்த அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆயினும் சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.