பொதுத் தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் தொடர்பாக மன்னார் தேர்தல் தொகுதியில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சி சார்பாக வன்னி மாவட்டத்தின் வேட்பாளர்கள் தெரிவில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேற்றை தினம் (4) மன்னார் சென்று இரண்டு மணி நேரம் கலந்துரையாடலில் ஈடுபட்ட பின் வேட்பாளர்களை இறுதி நிலைப்படுத்தியதாக தெரிய வருகிறது.
ளைஞர்கள் மற்றும் புதியவர்களுக்கு இடம் கொடுக்கும் வகையில் இத் தேர்தலில் இருந்து நான் விலகுவதாக ஏற்கனவே அறிவித்திருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதனடிப்படையில், மன்னார் மாவட்டத்திலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் வடமாகாண பிரதம செயலாளர் அந்தோணிப்பிள்ளை பத்திநாதன், மன்னாரின் இளம் சட்டத்தரணி செல்வராஜா டினேசன் ஆகிய மூவரும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மன்னார் தொகுதி வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என்று தெரிய வருகிறது.