மன்னார் – காற்றாலை திட்டத்தில் பாரிய மோசடி!

மன்னார் பிரதேசத்தில் 500 மெகாவாட் காற்றாலை புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டத்தை அமைக்க அரசாங்கம் எட்டிய உடன்படிக்கையையடுத்து, போட்டித் தன்மை வாய்ந்த விலைமனு கோரல் இன்றி மன்னார் காற்றாலை மின் உற்பத்தியின் அலகொன்றை 8.26 டொலருக்கு கொள்வனவு செய்யும்  ஒப்பந்தத்துக்கு வருவதற்கு அரசாங்கம் உடன்பாட்டை தெரிவித்துள்ளது. 

போட்டி முறையில் அமைந்த விலைமனு கோரலுக்குச் சென்றால் குறைந்த தொகையில் பெற முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தமது நிலைப்பாட்டை பல முறை தெரிவித்துள்ளது. 

இது எதனையும் பொருட்படுத்தாமல் அரசாங்கம் செயற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

50 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்திற்கான விலைமனு கோரலை போட்டி மிகு விலைமனு ஊடாக மின்சார சபை கோர தீர்மானித்திருந்தாலும், அந்த விலைமனு இதுவரை கோரப்படவில்லை. 

இந்தச் சட்ட விரோத ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

நேற்று முன்தினம் மின்சார சபையின் 50 மெகாவாட் திட்டத்துக்கான போட்டி மிகு விலைமனு அறிவிக்கப்பட்டுள்ளன. 

50 மெகாவாட்டின் அலகொன்றின் கொள்வனவு விலை 4.8 அமெரிக்க டொலர்கள் ஆகும். போட்டி மிகு விலைமனு இல்லாமல் போன 500 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தியின் அலகொண்றின் கொள்வனவு விலை 8.26 டொலர்களாக அமைந்து காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

இதற்கேற்ப அரசின் திருட்டு வெளிப்படையில்  நடந்துள்ளது. 50 மெகாவாட் உற்பத்தி திட்டத்தின் விலைமனு ஊடான விலையை தெரிந்து கொள்ளும் வரை, 500 மெகாவாட் உற்பத்தித் திட்டத்திற்கான விலையை முடிவு செய்ய வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தி பல முறை கோரிக்கை விடுத்தது. 

இவற்றுக்கு செவிசாய்க்காமலே, அமைச்சரவை சட்டவிரோதமான முறையில் குழுவொன்றை நியமித்து, இரண்டாவது விலைமனுவின் நிர்ணய விலை வெளிவருவதற்கு முன்னரே 500 மெகாவாட் திட்டத்திற்கு அதிக விலையில் அனுமதி வழங்கியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த நடைமுறையை பொதுப் பயன்பாடுகள்  ஆணைக்குழு தாமதப்படுத்தியுள்ளது. போட்டி மிகு விலைமனு முறை தவிர்ந்த 500 மெகாவாட் ஒப்பந்தத்தையும், சட்டமா அதிபரின் இணக்கப்பாட்டையும் கோரியுள்ளது.

 இவை அனைத்திற்கும் இன்னும் பதில் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *