மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயானம் ஒன்றில் இருந்து ஆனொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தேற்றாத்தீவு மயானத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட குறித்த சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் சடலத்திற்கு அருகில் சமய வழிபாடுகள் இடம் பெற்றதற்கான தடயங்களும் பொலிஸாரினால் கண்டறியப்பட்டுள்ளன.
சடலம் சிதைவடைந்த நிலையில் இருப்பதால் களுவாஞ்சிகுடி பொலிஸாருடன் இணைந்து குற்றத்தடவியல் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை சமய வழிபாடுகள் இடம் பெற்றதற்கான தடயங்கள் காணப்படுவதனால் , நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.