மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று முதல் ஆரம்பம்:

15வது மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பில் தனிநபர் மற்றும் வீட்டுத் தகவல் சேகரிப்பு நடவடிக்கை இன்று (07) ஆரம்பமாகவுள்ளது.

அதற்காக மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று பார்வையிடவுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா சேனவிரத்ன தெரிவித்துள்ளார்.

2012 மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில், சமீபத்திய பட்டியல்கள் வீட்டு அலகுகளில் 24% அதிகரிப்பைக் காட்டுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *