குறிப்பிட்ட ஒரு செல்வந்த வர்க்கத்தினை பாதுகாக்கின்ற பொருளாதாரம் முறை ஒன்றே தற்போது நாட்டில் காணப்படுகின்றது. IMF ஒப்பந்தம் மூலமும் தொழிலாளர் வர்க்கத்தின் ETF, EPF பணங்களை கொள்ளையடித்து முதல் தர பணக்காரர்களை பாதுகாத்து வரும் ஆட்சியே நாட்டில் காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக இருந்தால் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களே முதலில் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். நாட்டின் தலைவரே அதிகபட்ச அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.
மக்களின் மீது வரிச் சுமையை சுமத்திக் கொண்டு செல்கின்றார். IMF குறிப்பிட்டதால்தான் அப்படி செய்கிறோம் என்பதை பதிலாக ஜனாதிபதி குறிப்பிட்டாலும் அது மக்களை ஏமாற்றுகின்ற கருத்தாகும். IMF ஒப்பந்தத்தில் அவ்வாறான ஒரு விடயமும் குறிப்பிடப்படவில்லை. அரசாங்கம் மக்களை அசௌகரியத்திற்குட்படுத்த முயற்சிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.